கரூரில் கடந்த செப்.27ஆம் தேதி விஜய் நடத்திய பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் டெல்லியில் இன்று (ஜன.19) சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அப்போது, “கரூர் பரப்புரைக்குச் செல்ல ஏன் தாமதம்?, தவிர்க்க முடியாத காரணமா?. கரூர் பரப்புரைக்குச் செல்ல தாமதமான காரணத்துக்கு ஆதாரம் உள்ளதா?" உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அடுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.