தெருத்தெருவாக ஏன் பிரச்சாரம் செய்கிறீர்கள்..? இபிஎஸ் கேள்வி

“விஜய் முகத்தைக் காட்டினாலே ஓட்டு விழும் என தவெகவினர் கூறுகிறார்கள்; அப்படியென்றால் எதற்காகத் தெருத்தெருவாகப் பிரச்சாரம் செய்கிறீர்கள்?” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். மதுராந்தகம் பரப்புரையில் பேசிய அவர், மக்கள் ஏற்கனவே ஒருமுறை ஏமாந்துவிட்டனர், இனி ஏமாற மாட்டார்கள் என்றார். மேலும், ரீல்ஸ் மற்றும் ரீல் ஆகிய இரண்டும் தான் தவெகவின் மூலதனம் எனக்கூறி அக்கட்சியின் தேர்தல் உத்திகளைக் கடுமையாக விமர்சித்தார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி

✕
✕