மின் கட்டணம் குறையாதது ஏன்? மின்வாரியம் விளக்கம்

தமிழகத்தில் மே 10 முதல் "200 யூனிட் இலவச மின்சாரம்" அமலுக்கு வந்தாலும், மே மாத பில்லில் 60 நாட்களுக்கான கணக்கீடு 'புரோ-ரெட்டா' முறையில் பிரித்து பார்க்கப்பட்டதால் சிலருக்கு கூடுதல் கட்டணம் வந்துள்ளது. திட்டம் தொடங்குவதற்கு முந்தைய நாட்களுக்கு பழைய முறையிலும், பிந்தைய 12 நாட்களுக்கு மட்டும் கூடுதல் இலவச யூனிட்டுகள் (மொத்தம் 120 யூனிட்) கணக்கிடப்பட்டதே கட்டணம் உயர காரணமாகும். அடுத்த 2 மாத சுழற்சியில் (முழுமையாக 60 நாட்கள்) பொதுமக்களுக்கு முழுமையான 200 யூனிட் இலவச சலுகை கிடைக்கும் என மின்வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி