தவெக அரசு குதிரை பேரம் நடத்தி அதிமுக MLA-க்களை தங்களது அணிக்கு இழுத்துள்ளதாக அனைத்துக் கட்சி தலைவர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். அந்த வகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், “புதிய டிஜிபி நியமனத்திற்கு பின்புதான் இந்த நிகழ்வு நடக்கும் என்று சொல்லப்படும் தகவல் உண்மை என்றால், தமிழ்நாட்டில் குதிரை பேர அரசு எதற்கு?” என்றார். தொடர்ந்து, “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடங்கி வைக்கவே முடியாத விஜய், பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்?” என்றார்.