"கொள்ளை அடிச்சு வெச்சுக்குற பணத்தை வைத்து மக்களை ஏமாற்றி திமுக ஜெயிக்க முடியாது" என விஜய் விமர்சித்துள்ளார். வேலூரில் இன்று (பிப்.23) பேசிய விஜய், “இப்போது நம்ம ஸ்டாலின் சார் அறிவாலயம் பக்கம் யார் நடந்து போனாலும், அறிவாலயம் பக்கத்தில் யார் நிழலுக்கு ஒதுங்குனாலும் கூட்டணியில் சேர்த்துக்கிறார். அந்த கொள்ளை அடிச்சி வெச்சியிருக்குற பணத்துல ஒரு பங்கு கொடுத்து அதற்கு பெயர் கல்லாப்பெட்டி கூட்டணியை கஷ்டப்பட்டு சேர்த்து இருக்கார்” என்றார்.