நடப்பு IPL 2026 தொடர் விறுவிறுப்பான பிளேஆப் சுற்றை நோக்கி நகரும் வேளையில், அதிக ஓட்டங்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கான பந்தயத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக 93 ஓட்டங்கள் விளாசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 579 ஓட்டங்களுடன் தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரை தொடர்ந்து மிட்செல் மார்ஷ் (563 ஓட்டங்கள்), ஹென்ரிச் கிளாசென் (555 ஓட்டங்கள்) மற்றும் சாய் சுதர்சன் (554 ஓட்டங்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் நீடிப்பதால் இந்த ரேஸ் மேலும் சூடுபிடித்துள்ளது.