தேர்தல் கூட்டணி குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆட்சியில் பங்கு, பூரண மதுவிலக்கு என்ற கொள்கை உடனேயே 2026ல் தங்களது கூட்டணி பேச்சுவார்த்தை அமையும் என தெரிவித்துள்ளார். இதற்கு முன் அதிமுக, பாஜக கூட்டணியில் பயணித்து வந்த கிருஷ்ணசாமி, இந்த முறை விஜய்யின் தவெக பக்கம் திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கிருஷ்ணசாமி கூறும் ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை தவெக மட்டுமே கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி: பாலிமர்