விழுப்புரம் அதிமுக அலுவலகம் யாருக்கு?

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தை கைப்பற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களிடையே மோதல் வெடித்துள்ளது. இந்த திடீர் பதற்றத்தை தொடர்ந்து, சட்டம்-ஒழுங்கு பாதிப்பை தவிர்க்க விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் (RDO) தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தங்களுக்குள் எழுந்த அதிகார போட்டி காரணமாக அதிமுகவின் இரு பிரிவினரும் மோதிக்கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி