தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரான கே.ராஜன் (85), இன்று (மே 17) சென்னை அடையாறு கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1983-ல் 'பிரம்மச்சாரிகள்' படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான இவர், சென்னை விநியோகஸ்தர்கள் சங்க தலைவராகவும் பணியாற்றியதோடு, 'நம்ம ஊரு மாரியம்மா' போன்ற படங்களை இயக்கியும், 'தங்கமான தங்கச்சி' உள்ளிட்ட படங்களுக்கு எழுத்தாளராகவும் பங்காற்றியுள்ளார்.