குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி, ஒப்புதல் வழங்கியுள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையின் மூலம், விவசாயிகளின் உழைப்பும் வாழ்வாதாரமும் காக்கப்படும். தற்போதைய பருவநிலை மாற்றத்தின் காரணமாக, முறையான சாகுபடி செய்ய முடியாமலும் விளைவித்த பயிர்களை சந்தைப்படுத்த முடியாமலும் திணறி வரும் விவசாயிகளுக்கு, இந்த அறிவிப்பு மிகப்பெரும் ஊக்கமாக அமையும் என கூறியுள்ளார்.