தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜன.6) காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "யார் அந்த சார்?" என்று அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து வந்துள்ளார். அதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும், இந்த "யார் அந்த சார்?" என்று அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து வந்ததால், அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.