இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு வீரர் என போற்றப்படுபவர் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ஹர்ஷினி கன்ஹேகர். இவர் இதுகுறித்து கூறுகையில், “தீயணைப்பு வீரர் ஆனபிறகும் விளையாட்டுகள், இசைக்கருவிகளை கற்பதை தொடர்ந்தேன். உங்களை எது தடுத்தாலும் உங்களுக்குப் பிடித்தமான துறையை, தேர்ந்தெடுத்து துணிச்சலாக செயல்படுங்கள்” என்றார். இப்பெண், கடந்த 20 வருடங்களாக சவால்கள் நிறைந்த தீயணைப்பு வீரராக இருந்து வருகிறார்.