வேலூர் தொகுதியில் வெற்றிக் கோட்டை யாருக்கு?

வரலாற்றுச் சிறப்புமிக்க வேலூர் தொகுதி தனது 17-வது சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கிறது. இதில் திமுக சார்பில் ப.கார்த்திகேயனும், அதிமுக சார்பில் எஸ்.ஆர்.கே.அப்புவும் மோதுகின்றனர். நாதக சார்பில் மாணவி சோனியாவும், தவெக சார்பில் வினோத் கண்ணனும் களத்தில் உள்ளனர். தவெக-வின் பிரச்சாரம் இரு திராவிடக் கட்சிகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல சமூகத்தினர் இங்கு வாழ்ந்தாலும், இஸ்லாமியர்களின் வாக்குகளே இத்தொகுதியின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.

தொடர்புடைய செய்தி