2001 சட்டமன்றத் தேர்தலில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை என 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். சட்டப்படி 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது என்பதால், அவரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதிமுக வெற்றி பெற்ற பின், எம்எல்ஏவாக இல்லாமலேயே முதலமைச்சர் ஆனார். 1991ல் பர்கூர், காங்கேயம் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார். எம்ஜிஆர் 1980ல் ஆண்டிப்பட்டி, மதுரை மேற்கு தொகுதிகளில் மனு தாக்கல் செய்து, மதுரை மேற்கில் போட்டியிட்டு வென்றார்.