பிகார் சட்டமன்ற தேர்தலில் ஆர்ஜேடி தலைமையிலான இந்தியா கூட்டணியில் இணைந்திருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) கட்சிக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படாததால், கூட்டணியில் பிளவு உருவாகியுள்ளது. இதனால், ஜார்க்கண்டில் ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரஸ் அமைச்சர்களை நீக்கி, ஜே.எம்.எம். பா.ஜ.க.வுடன் மீண்டும் இணையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஜார்க்கண்டில் ஜே.எம்.எம். கட்சிக்கு 3 எம்.பி.க்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.