உலகின் கூரை என்று அழைக்கப்படும் மலை எது?

மத்திய ஆசியாவில் அமைந்துள்ள பாமிர் மலைத்தொடர் “உலகின் கூரை” என்று அழைக்கப்படுகிறது. தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளின் சந்திப்பில் அமைந்துள்ள இம்மலைத்தொடர், உலகின் மிக உயரமான மலைத்தொடர்களில் ஒன்றாகும். ஹிமாலயா, கராகோரம், ஹிந்துகுஷ், தியான்ஷான் போன்ற மலைத்தொடர்கள் பாமிர் பகுதியில் ஒன்றுசேருவதால் இதற்கு “உலகின் கூரை” என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இதன் சராசரி உயரம் 4,000 முதல் 7,000 மீட்டர் வரை உள்ளது.

தொடர்புடைய செய்தி