இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் இன்று ஒருசில இடங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்களில் மணிக்கு 40-50 கி.மீ வேக பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி