பிஎம் கிசான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான 22-வது தவணை தொகை பிப்.2-ம் வாரத்தில் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தகுதியுள்ள விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி பெறும் இத்திட்டத்தில், இம்முறை ரூ.2,000 தவணையை பெற இ-கேஒய்சி, நில சரிபார்ப்பு மற்றும் வங்கி கணக்கில் டிபிடி வசதி ஆகியவற்றை சரிபார்த்து முறையாக முடித்திருப்பது அவசியமாகும். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.