ரொனால்டோவை பற்றி அவதூறு பேச பணம்: முன்னாள் காதலி பகீர் தகவல்

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை பற்றி தவறாக பேசுவதற்காக தனக்கு பெருந்தொகை வழங்கப்பட்டதாக அவரது முன்னாள் காதலியும், நடிகையுமான ஜெய் அட்கின்சன் தெரிவித்துள்ளார். ரொனால்டோவை விட்டு பிரிந்தபோது அவரை பற்றி எதிர்மறையான கருத்துகளை பரப்ப பல தரப்பிலிருந்து அழுத்தம் வந்தும், அந்த பணத்தை தான் ஏற்க மறுத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். ரொனால்டோ குறித்து எந்தவொரு மோசமான கருத்தையும் சொல்ல முடியாது என அவர் பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி