டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டின் சுற்றுப்பகுதியில் வாட்சப் சேட்டிங் விபரங்கள் கிழிந்த நிலையில் கிடந்தன. சென்னை மணப்பாக்கத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் இன்று (மே 11) அதிகாலை முதலாக அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. CRPF வீரர்களின் பாதுகாப்புடன் நடக்கும் சோதனை காரணமாக பரபரப்பு சூழல் நிலவுகிறது. இந்நிலையில், விசாகனுடன் ஒருவர் வாட்சப் சேட்டிங் செய்த காட்சிகள் குறித்த ஆவணங்கள் கிழிந்த நிலையில் வீட்டின் வெளியே கிடைத்துள்ளன. இந்த விஷயம் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.