ஃபார்வேர்டு மற்றும் அப்லோடு செய்து அனுப்பப்படும் போட்டோக்கள், வீடியோக்களை 'ஏஐ கன்டென்ட் லேபிள்' என அடையாளப்படுத்தும் புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி வருகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டிருந்தாலோ அல்லது மாற்றப்பட்டிருந்தாலோ ஏஐ கன்டென்ட் லேபிளை பயன்படுத்தலாம். இதன் மூலம் ஏஐ வீடியோவா அல்லது உண்மையான வீடியோவா என்பதை மற்றவர்கள் துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும்.