ஆளுநர் ரவியிடம் விஜய் அடுக்கடுக்கான கோரிக்கை... அதிகாரப்பூர்வ தகவல்

தவெக தலைவர் விஜய் இன்று (டிச. 30) ஆளுநர் ரவியை சந்தித்து மனு அளித்தார். இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தினோம். பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காத நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி