பட்டாசுத் துகள் கண்ணில் பட்டால் என்ன செய்ய வேண்டும்?

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் தங்கராணி கூறும் பொழுது, “வெடி மருந்து அல்லது தீப்பொறி கண்களில் பட்டால் கண்களை தேய்க்கவோ, கசக்கவோ கூடாது. அவ்வாறு செய்தால் விழிப்படத்தில் சிராய்ப்பு ஏற்பட்டு பார்வை இழப்புக்கூட ஏற்படலாம். எனவே கண்களில் பட்டாசுத் துகள் விழுந்தால் முதலில் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். பாதிப்பு பெரிய அளவில் இருந்தால் சுய மருத்துவம் செய்யாமல் மருத்துவமனை சென்று சிகிச்சை பெறுவது அவசியம்” என்றார்.

தொடர்புடைய செய்தி