‘ஜனநாயகன் படத்திற்கு என்ன பிரச்னை?’.. தயாரிப்பாளர் விளக்கம்

ஜனநாயகன் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் குறித்து படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணா விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, “ஜனநாயகன் படம் 2025 டிச.8 அன்று CBFC-க்கு சமர்ப்பிக்கப்பட்டது. பரிசீலனை குழு அதனை பார்த்ததுவிட்டு, UA 16+ சான்றிதழ் வழங்குவதாகவும், சில மாற்றங்களை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தது. பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களைச் செய்து மீண்டும் சமர்ப்பித்தோம். முறைப்படி சான்றிதழ் கைக்கு வரவில்லை என்றாலும் வெளியீட்டில் சிக்கல் இருக்காது என்றே நம்பினோம்" என்றார்.

தொடர்புடைய செய்தி