20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி சூப்பர்-8 சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளிடம் தொடர்ந்து தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இங்கிலாந்துக்கு எதிராக 147 ரன் இலக்கை துரத்தி 95 ரன்னில் சுருண்டது பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு திறந்துள்ளது. இலங்கையை இன்று பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.