தை அமாவாசை முக்கியமானதாக கருதப்படுவதற்கான காரணம் என்ன?

தேவர்களின் விடியற்காலமாக கருதப்படும் உத்தராயண புண்ணிய காலத்தின் முதல் அமாவாசை என்பதால், தை அமாவாசை முன்னோர்களை வழிபட மிகவும் உன்னதமான நாளாக போற்றப்படுகிறது. சூரியனை சாட்சியாக வைத்து இந்நாளில் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம், ஜாதகத்தில் உள்ள ராகு-கேது பாதிப்புகள் மற்றும் பித்ரு தோஷங்கள் நீங்கி வாழ்க்கையில் நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம். தேவர்கள் சூரியனின் வரவை எதிர்நோக்கும் இந்த தை மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகளை முன்னோர்கள் மனம் மகிழ்ந்து ஏற்றுக்கொள்வதாக நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்தி