தமிழ்நாட்டில் நடைபெறுவது 'அம்மா ஆட்சி' எனச் சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் 'சும்மா ஆட்சி' என கூறி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயிகள் பாதிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா என்றும், அவரது ஆட்சியைத் தற்போதைய விஜய் ஆட்சியுடன் ஒப்பிட முடியாது என்றும் அவர் சாடினார். மேலும், விவசாயிகள் கண்ணீரில் தத்தளிக்கும் இந்தச் சூழலில், தேர்தல் வாக்குறுதிகள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.