நமது மூளையில் உள்ள செல்களில் ஏற்படும் அசாதாரணமான வளர்ச்சி மூளைக்கட்டி என்று அழைக்கப்படுகிறது. இதனை முதல்நிலை, இரண்டாம் நிலை என வகைப்படுத்தலாம். முதல்நிலை மூளைக்கட்டி தொடக்க நிலை ஆகும். இரண்டாம் நிலை உடலின் பிற பகுதியில் உருவாகிய புற்றுநோய்கட்டி மூளைக்கு பரவி கட்டி ஏற்படுவது ஆகும். முதல்நிலையில் கட்டி மெதுவாக வளரும். அதனை எளிதில் அகற்றலாம். இரண்டாவது நிலை திசுவை சேதப்படுத்தும். அகற்றுவதும் கடினம்.