பீரும் ஒரு வகையான மது தான். இதிலும் எத்தனால் என்கிற போதைப் பொருள் கலக்கப்பட்டுள்ளது. எனவே பீரும் ஆல்கஹால் வகையைச் சேர்ந்ததுதான். ஆல்கஹால் மூலம் ஏற்படும் பக்க விளைவுகள் அனைத்தும், பீர் குடிப்பவர்களுக்கும் ஏற்படும். இதய நோய், நீரிழிவு, இரத்த கொதிப்பு, கல்லீரல் பாதிப்பு, பக்கவாதம் போன்ற அனைத்து நோய்களும் ஏற்படும். அதிகமாக பீர் குடிப்பவர்களுக்கு கல்லீரல், பெருங்குடல், உணவுக்குழாய் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.