வழக்கு எண் 18/9, வில்லம்பு, மாநகரம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஸ்ரீ-யின் உடல்நிலை குறித்து சமீபத்தில் வீடியோ வெளியாகி பல்வேறு கேள்வியை முன்வைத்தது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தயாரிப்பாளர் SR பிரபு, "ஸ்ரீ-யின் உடல்நிலை குறித்த விஷயத்தில் அக்கறையுடன் இருக்கிறோம். அவரின் உடல்நல முன்னேற்றத்துக்கு உதவினால் பாராட்டுவோம். உண்மை தெரியாமல் தவறான தகவலை பரப்பாதீர்கள்" என கேட்டுக்கொண்டுள்ளார்.