கோடைக்காலத்தில் சிறுநீரகக் கல் பிரச்சனை அதிகரிக்க என்ன காரணம்?

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் நம் உடலில் வியர்வை அதிகமாக வெளியேறி, நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் சிறுநீரின் அளவு குறைந்து, அதில் கால்சியம் மற்றும் யூரிக் அமிலம் போன்ற தாதுக்கள் அடர்த்தியாகி படிகங்களாக படிந்து சிறுநீரக கற்களாக மாறுகின்றன. எனவே, இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க கோடை நாட்களில் தினசரி 3 முதல் 4 லிட்டர் வரை போதுமான அளவு தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும்.

தொடர்புடைய செய்தி