ரத்த தானம் செய்பவர்கள் குறைந்தபட்சம் நான்கு மணி நேரத்திற்கு முன் உணவு சாப்பிட்டிருக்க வேண்டியது அவசியம். ரத்த தானம் செய்வதற்கு முன் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். அதேபோல இரும்புச் சத்து நிறைந்த சிக்கன், முட்டை, மீன், கீரைகள், காய்கறிகள் ஆகியவற்றை உண்ணலாம். ரத்த தானத்திற்கு பிறகு உணவில் பழங்களை சேர்த்து கொள்வது நல்லது. பழங்கள் சாப்பிடுவது சோர்வு மற்றும் பலவீனத்தில் இருந்து விடுபட உதவுகிறது.