தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் உட்பட 10 பேர் பதவியேற்றுள்ள நிலையில், நேற்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. முதலமைச்சருக்குக் காவல்துறை மற்றும் பெண்கள் நலன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காங்கிரசுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கம்யூனிஸ்டு, விசிக அமைச்சரவையில் பங்கேற்கவில்லை என்று ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டது. இதனிடையே மீன்வளம், போக்குவரத்து, இந்துசமய அறநிலையத்துறை, உயர் கல்வி போன்ற மீதமுள்ள முக்கிய துறைகளுக்கு இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை.