தமிழ் திரையுலகில் தனது இயக்கம், நடிப்பு, நகைச்சுவை காட்சிகளால் மூடநம்பிக்கைக்கு எதிரான பழக்கங்களை தோலுரித்த நடிகர்களில் மணிவண்ணன் குறிப்பிடத்தக்கவர். அவரின் இயக்கத்தில் வெளியான படங்களில் கவனிக்கக்கூடியவை அமைதிப்படை, ஆண்டான் அடிமை, சின்னத்தம்பி பெரியதம்பி, நாகராஜ சோழன் எம்.ஏ எம்.எல்.ஏ, சந்தன காற்று, புது மனிதன், ஜல்லிக்கட்டு, அம்பிகை நேரில் வந்தாள், தோழர் பாண்டியன். இவைகளில் நாகராஜ சோழன் திரைப்படம் சமகால அரசியல் நிகழ்வுகளை வைத்து தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி அடைந்தது.