தவெக அரசின் பட்ஜெட்டில் எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.22 லட்சத்தில் மருத்துவக் காப்பீடு திட்டம் என்றார்கள், ஆனால் ஏமாற்றம். திமுக, அதிமுக திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது. தேர்தல் நேரத்தில் தவெக அளித்த 6 இலவச சிலிண்டர் வாக்குறுதி என்ன ஆனது? மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என கடுமையாக சாடியுள்ளார்.