“என்னா நடிப்பு... விஜயே தோத்துட்டாரு”.. சத்தியபாமாவை விமர்சித்த இபிஎஸ்

தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்து விலகி தவெக சார்பில் போட்டியிடும் சத்தியபாமாவை விமர்சித்தார். தவெக பரப்புரைக் கூட்டத்தில் சத்தியபாமா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டபோது, முதலமைச்சர் விஜய் அவருக்கு ஆறுதல் கூறியிருந்தார். இதை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி, “என்னா நடிப்பு... விஜயே தோத்துட்டாரு” என விமர்சித்தார். மேலும், “ஜெயலலிதா அம்மா கூட இருந்தமாதிரி அதிமுகவை விமர்சிக்கிறார். அவர் அம்மாவை பார்த்தே இல்லை” என்றார்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி

✕
✕