வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

தாம்பரம் மற்றும் போடிநாயக்கனூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் மே 23, 30 மற்றும் ஜூன் 6, 13 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு போடிநாயக்கனூர் சென்றடையும். மறுமார்க்கத்தில் மே 24, 31 மற்றும் ஜூன் 7, 14 ஆகிய தேதிகளில் போடிநாயக்கனூரிலிருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.30க்கு தாம்பரம் வந்தடையும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தொடர்புடைய செய்தி