“மதுரையின் ஒரு தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால்கூட இங்கு மெட்ரோ திட்டத்தை கொண்டுவருவோம் என தேவேந்திர பட்னவிஸ் கூறியிருப்பது முற்றிலும் சாத்தியமற்றது" என மதுரை மத்தி திமுக வேட்பாளர் PTR பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “ஒரு எம்.எல்.ஏ.,-வால், மதுரையின் மிக முக்கிய திட்டத்தை சாத்தியப்படுத்த முடியும் என கூறுவது பிதற்றல். பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் மட்டுமே மதுரைக்கு மெட்ரோ கொண்டுவரப்படும் என கூறுவது ஆணவப் பேச்சு” என்றார்.