மகாரஷ்டிரா: நாக்பூரில் ஆசிரியையாக பணியாற்றி வந்த சமீரா பாத்திமா என்ற பெண் 8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். சமீரா கடந்த 15 ஆண்டுகளாக பணக்காரர்கள், ஏற்கனவே திருமணமான ஆண்கள் ஆகியோரை குறிவைத்து பழகி, அவர்களை தனது வலையில் வீழ்த்தி பல லட்சம் ரூபாயை ஏமாற்றியுள்ளார். இதற்கு சமூக வலைதளங்கள், திருமண இணையதளங்கள் ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளார். சமீரா 9-வது திருமணத்திற்கு தயாராகி வந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.