தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தொடர்பான முக்கிய தகவலை அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான பதிவில், “தமிழ்நாட்டின் வருங்காலம் நீங்கள் இல்லாமல் இல்லை. மக்கள் தலைவரின் ஆட்சி உங்களுக்கானது மட்டுமல்ல, உங்களுடைய பரிந்துரைகளாலும் ஆனது. தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கைக்காக உங்களது பரிந்துரைகளை வழங்கும் இணையதளம் இன்று (பிப்.5) மாலை 6 மணியளவில் வெளியாகவுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.