“பீகார் தேர்தல் வெற்றியைப் போலவே, தமிழகத்தில் நாங்கள் வெற்றிப் பெறுவோம்” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நெல்லையில் அவர் இன்று (நவ.14) அளித்த பேட்டியில், “பீகார் தேர்தலில் 190 இடங்களுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் உள்ளது, இது ஏற்கனவே அங்கு நடைபெற்றுள்ள ஆட்சிக்கு மீண்டும் பொதுமக்கள் அங்கீகாரத்தை வழங்கி உள்ளார்கள் என்பதை காட்டுகிறது. இதனை நாங்கள் வரவேற்கிறோம்” என்றார்.
நன்றி: பாலிமர்