வருகிற பிப்., 14ஆம் தேதிக்குள் கூட்டணி குறித்த முடிவை எட்டுவோம் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். நெல்லையில் நேற்று (பிப்., 05) செய்தியாளர்களை சந்தித்த அவர், கதவைத் திறந்து வைத்திருக்கிறோம். நல்ல காற்று வந்தால் திறந்து வைப்போம். மோசமான காற்று வந்தால் மூடி விடுவோம். சொன்ன தேதியில் கூட்டணி முடிவை எட்டுவோம் என்று தெரிவித்தார். புதிய தமிழகம் கடந்த தேர்தல்களில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.