ஈரான் பல ஆண்டுகளாக அணு சக்தி திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது. அணு ஆயுதம் தயாரிப்பதற்கான அந்த திறனை இன்னும் சில வாரங்களில் எட்டிவிடும் நிலையில் உள்ளது. ஆனால், இப்போது இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் நடப்பதால், அணு ஆயுதம் தொடர்பான ஈரானின் லட்சியம் இன்னும் வலுவடையலாம். இதனிடையில் ஈரான் சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். ஆனால் சரணடைய மாட்டோம் என ஈரான் தலைவர் ஆயத்துல்லா காமேனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.