பஞ்சாப்பின் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து விமானப்படை வீரர்களிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி அங்கு உரையாற்றினார். “நாட்டுக்காக தங்கள் இன்னுயிரையும் தர வீரர்கள் தயாராக உள்ளனர். அணு ஆயுத பிளாக் மெயிலுக்கு அடிப்பணிய மாட்டோம். விமானப்படை வீரர்கள் போர்க்களத்தில் புதிய வரலாறு படைத்துள்ளனர். இப்போது இன்னொரு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், இந்தியா உறுதியான பதிலடியை கொடுக்கும்" என்றார்.