தவெக ஆட்சி கவிழ ஒருபோதும் விடமாட்டோம்.. திருமாவளவன்

தவெக ஆட்சி கவிழ விசிக ஒருபோதும் இடம் கொடுக்காது எனத் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 4 பேர் தவெகவில் இணைந்ததை ஆரோக்கியமான அரசியலாகக் கருதவில்லை என்று குறிப்பிட்ட அவர், இந்த ஆட்சி 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என்றே கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து விசிக ஆதரவளித்ததாகக் கூறினார். விமர்சனங்களுக்கு இடம் தராமல் தவெக செயல்பட வேண்டும் என்றும், அமைச்சரவையில் விசிக பங்கேற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்தி