எம்ஜிஆரின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு, தொண்டர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், “எம்ஜிஆரின் பிறந்தநாளை எழுச்சி விழாவாகக் கொண்டாடும் அதிமுகவினருக்கு வாழ்த்து. எம்ஜிஆர் மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனங்களை விட்டு மறையவில்லை. தேர்தலில் தொடர் வெற்றியைப் பெற்று பெருமை சேர்த்திட்ட மகத்தான தலைவர் எம்ஜிஆர். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்” என கேட்டுக்கொண்டார்.
நன்றி: குமுதம்