நம்மாலானதை நாம் செய்வோம்.. கி. வீரமணிக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (டிச.02) தனது 93-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் எம்.பி.யான கமல்ஹாசன், தனது X சமூக வலைதளத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். "அவரை வாழ்த்துவதோடு, அவர் வாழ்நாள் பணியில் கரம்கோப்பதும் நம் அனைவரின் கடமை. நம்மாலானதை நாம் செய்வோம்" என்று குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், கி. வீரமணி மேலும் செயலூக்கத்தோடு நீடூழி வாழ வாழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி