மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசார பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு பேசினார். அப்போது, “அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தைப்பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை முழுமையாக வழங்கப்படும். தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை இலவசமாக வழங்கப்படும். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தின் அகராதியில் ஏழை என்ற சொல் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்” என்றார்.