திமுக கூட்டணியை விட்டு தவாக வேல்முருகன் வெளியேறுவார் என தகவல்கள் பரவிய நிலையில், “பல்வேறு கோரிக்கைகளுடன் திமுகவை தொடர்ந்து ஆதரிக்கிறோம்” என வேல்முருகன் தெரிவித்துள்ளார். முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து புகழாரம் சூட்டிய அவர், ஒவ்வொரு வீட்டிலும் திமுக அரசின் திட்டங்களால் பலனடைந்தவர்கள் இருப்பதாக கும்பகோணத்தில் பேசினார்.
நன்றி: நியூஸ் தமிழ்