"ஈரானில் தீய ஆட்சியின் அச்சுறுத்தலை முற்றிலும் ஒழிப்போம்".. டிரம்ப்

அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட முரண்டு பிடித்துவரும் ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் கைகோர்த்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், "ஈரானில் ராணுவ நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. ஈரானின் அணு ஆயுத நடவடிக்கை உலகிற்கு ஆபத்து. அணுசக்திக்கு எதிராக பலமுறை எச்சரித்தும் ஈரான் பொருட்படுத்தவில்லை. எச்சரிக்கைகளையும் மீறி அணுசக்தி திட்டத்தை தொடர முனைப்பு காட்டிய ஈரான். ஈரானில் தீய ஆட்சியின் அச்சுறுத்தலை முற்றிலும் ஒழிப்போம்" என்றார்.

தொடர்புடைய செய்தி